×

‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை தேர்வு செய்ய பீகார், உ.பி மக்கள் விருப்பம்: பீகார் அமைச்சர் சொல்கிறார்

பல்லியா: 2024 மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என பீகார், உத்தரபிரதேச மக்கள் விரும்புவதாக பீகார் அமைச்சர் ஷர்வன் குமார் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜ அரசை வீழ்ந்த திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா, சமாஜ்வாடி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் 3வது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் இருக்க வேண்டும் என பீகார், உத்தரபிரதேச மாநில மக்கள் விரும்புவதாக பீகார் அமைச்சர் ஷர்வன் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷர்வன் குமார், “பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருக்கும் நிதிஷ் குமார், பிரதமர் வேட்பாளராகவோ, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவோ இருக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று முன்தினம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை தேர்வு செய்ய பீகார், உ.பி மக்கள் விருப்பம்: பீகார் அமைச்சர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Bihar ,U. ,Nidish Kumar ,PM ,India ,alliance ,B People's ,minister ,Ballya ,Uttar Pradesh ,India' alliance ,2024 elections ,Bihar, U. ,Alliance B People's Wishes ,
× RELATED தென் இந்தியாவில் உ.பி மக்களையும்,...